Latestசினிமா

தமிழக முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ்

சென்னை, ஆக 7 – தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவருமான விஜயுடனான விவாகரத்து வழக்கை, அவரது மனைவி சங்கீதா வாபஸ் பெற்றுள்ளார்.

இதையடுத்து, செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பும், தேர்தல் பிரசாரக் காலத்திலும் பெரும் கவனத்தை ஈர்த்தது.

விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பேசப்பட்ட நிலையில், அது தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய பேசுபொருள்களில் ஒன்றாகவும் மாறியிருந்தது.

இந்நிலையில், இன்று காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜரான சங்கீதா, தனது விவாகரத்து மனுவைத் திரும்பப் பெறுவதாக தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிமன்றம் மனுவை ஏற்று வழக்கை அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்தது. இதன்மூலம், கடந்த சில மாதங்களாக தமிழக அரசியல் மற்றும் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவாகரத்து விவகாரத்திற்கு சட்டரீதியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!