Latestமலேசியா

தமிழ் பாடலால் ஒன்றான சுங்கை பட்டாணி; இன எல்லைகளைத் தாண்டி வைரலாகும் ‘SP Nambe Ooru’

சுங்கை பட்டாணி, ஆகஸ்ட் 19 – மொழி வேறாக இருந்தாலும், ஊர்ப்பாசத்திற்கு எல்லை இல்லை என்பதை நிரூபித்து வருகிறது சுங்கை பட்டாணியை மையமாகக் கொண்டு உருவான ‘SP Nambe Ooru’ தமிழ் பாடல்.

RESHRAO வெளியிட்டுள்ள இந்தப் பாடல், சுங்கை பட்டாணியின் அடையாளம், மக்கள் மற்றும் ‘நம்ம ஊர்’ உணர்வை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழில் அமைந்திருந்தாலும், இந்தியர்கள் மட்டுமின்றி மலாய், சீனர்கள் உள்ளிட்ட பல்வேறு இனத்தவரிடையேயும் பாடல் தற்போது வரவேற்பைப் பெற்று வருகிறது.

சமூக வலைதளங்களில் பலரும் பாடலைப் பகிர்ந்து, சுங்கை பட்டாணி மீதான தங்களது பாசத்தையும் நினைவுகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

“மொழி தமிழ்; உணர்வு சுங்கை பட்டாணி” என்ற வகையில், இன-மொழி எல்லைகளைத் தாண்டி மக்களை ஒன்றிணைக்கும் பாடலாக இது மாறியுள்ளது.

ஒரு தமிழ் பாடல், ஒரு நகரத்தின் பெயரை மட்டுமல்லாமல் “இது நம்ம ஊர்” என்ற உணர்வையும் அனைவரிடமும் ஏற்படுத்தியிருப்பதே இதன் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!