
நீலாய், பிப் 19 – கோலாலம்புர் மாநகர் பகுதியில் 17 மாடிகளைக் கொண்ட பள்ளியை கட்டுவதற்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம் தெரிவித்திருக்கும் ஆலோசனையை கல்வி அமைச்சு வரவேற்ற போதிலும் அது தொடர்பான பாதுகாப்பு மற்றும் பொருத்தமான அம்சங்கள் ஆராயப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் பட்லினா (Fadhlina Sidek) சிடேக் தெரிவித்திருக்கிறார்.
கூட்டரசு பிரதேச கல்வித்துறையின் கீழ் உயரமான பள்ளி செயல்படுத்தப்பட்டுள்ளன. கோலாலம்பூரில் உள்ள 10 மாடிகளைக் கொண்ட ஸ்ரீ செந்தோசா (Seri Sentosa) தேசிய இடைநிலைப் பள்ளி மிக உயரமாக கட்டப்பட்டதாகும்.
17 மாடிகள் கொண்ட பள்ளி விவகாரத்தைப் பொறுத்தவரை எத்தனை மாடிகள் குழந்தைகளுக்கு ஏற்றது மற்றும் பாதுகாப்பானது என்பதை அவ்வப்போது பார்ப்போம் என்று கல்வி அமைச்சின் 2025 ஆம் ஆண்டு Madani தலைமுறை நிகழ்சியை தொடக்கிவைத்தபின் பட்லினா செய்தியாளர்களிடம் இத்தகவலை வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் கல்வி அமைச்சின் தலைமை இயக்குநர் அஸ்மான் அட்னானும் (Azman Adnan) கலந்துகொண்டார்.