Latestமலேசியா

தவறான உள்ளடக்கம் Edisi Siasat. Edisi Khas Telegram சேனல்களை மூடும்படி நீதிமன்றம் உத்தரவு

கோலாலம்பூர் , நவ 14 – 33 தவறான மற்றும் புண்படுத்தும் உள்ளடக்கங்களை நீக்கவும், Edisi Siasat மற்றும் Edisi Khas ஆகிய இரண்டு டெலிகிராம் சேனல்களை இன்று இறுதிக்குள் உடனடியாக மூடவும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சேனல்களின் நிர்வாகிகளுக்கு எதிரான வழக்கில் MCMC எனப்படும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது .

எனினும் அவர்களின் அடையாளம் தெரியவில்லை. நிர்வாகிகள் சிவில் வழக்கில் ஆஜராகி தற்காப்பு மனுவை தாக்கல் செய்யத் தவறியதை அடுத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

எதிர் தரப்பினர் பதிலளிக்கவோ அல்லது நீதிமன்றத்தில் ஆஜராகவோ தவறியதன் காரணமாக ஒரு தரப்பினருக்கு சாதகமாக நீதிமன்றத் தீர்ப்பை வாதி பெற்றுள்ளார்.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட Edisi Siasat மற்றும் Edisi Khas Channel களின் நிர்வாகிகளான முதலாவது மற்றும் இரண்டாவது பிரதிவாதிகளுக்கு எதிராக நீதிபதி Mahaan Mat Taib இந்த தீர்ப்பை வழங்கியதாக மலேசிய தொடர்பு மற்றும் பல்லுடக ஆணையத்தின் வழக்கறிஞர் வோங் குவோ ஜின் ( Wong Guo Jin ) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!