Latestமலேசியா

தாம் கைதுச் செய்யப்பட்டது செல்லாது என்பதை நிரூபித்த மருத்துவருக்கு 145,000 ரிங்கிட் இழப்பீடு

கோலாலம்பூர், மே-18 – மூன்றாண்டுகளுக்கு முன் போலீஸ் வீடு புகுந்து சோதனையிட்டது மற்றும் தவறாகத் தம்மைக் கைதுச் செய்ததற்காக மருத்துவர் ஒருவர் 1 லட்சத்து 45 ஆயிரம் ரிங்கிட்டை இழப்பீடாகப் பெற்றுள்ளார்.

போலீஸ் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் Dr Ranjeet Singh தனது குற்றச்சாட்டை ஆதாரப்பூர்வமாக நிரூபித்ததை அடுத்து கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்குச் சாதகமாக அத்தீர்ப்பை வழங்கியது.

கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் வாதிக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளை பிரதிவாதியான போலீஸ் மதிக்கவில்லை என நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

Dr Ranjeet-டுக்கு செலவுத் தொகையாக 13,000 ரிங்கிட்டை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

2021-ஆம் ஆண்டு Seri Kembangan, Green Park Residence குடியிருப்பில் அதிகாலை 1 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்த போது Dr Ranjeet வீட்டுக்குள் புகுந்து போலீஸ் அவரைக் கைதுச் செய்தது.

கைதான போது போலீஸ் தம்மை மனிதாபிமானம் இல்லாமல் நடத்தியதோடு, வீட்டில் சோதனை மேற்கொள்வதற்கான காரணத்தையும் தாம் கைதுச் செய்யப்பட வேண்டிய அவசியம் குறித்து முறையாக விளக்கவில்லை.

அச்சம்பவத்தால் தாம் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானதாகக் கூறி, விசாரணை அதிகாரிகள், வீடு புகுந்து சோதனையிட்டவர்கள், மலேசிய அரசாங்கம், தேசியப் போலீஸ் படைத் தலைவர் ஆகியோருக்கு எதிராக Dr Ranjeet வழக்குத் தொடுத்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!