
கோத்தா பாரு, பிப்ரவரி-25 – கிளந்தான், தானா மேரா அருகே லாலாங் பெப்புயுவில் மேற்கொள்ளப்பட்ட சாலைத் தடுப்புச் சோதனையில், 2,000க்கும் மேற்பட்ட ரோஜா மரக்கன்றுகளை கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது.
காலை 7 மணிக்கு Op Taring Wawasan சோதனையில் சந்தேகத்திற்குரிய லாரியொன்றை நிறுத்திய போது, பொது நடவடிக்கைப் படை அச்செடிகளைப் பறிமுதல் செய்தது.
தாய்லாந்திலிருந்து கடத்தப்பட்டதாக நம்பப்படும் அந்த ரோஜா மரக்கன்றுகளை, உள்ளூர் சந்தைகளுக்கு விநியோகிப்பதற்காக 24 வயது லாரி ஓட்டுநர் கொண்டுச் சென்றுள்ளார்.
650,000 ரிங்கிட் மதிப்பிலான அச்செடிகள், பூச்சி பிடித்தும் நோய்களைக் கொண்டிருந்ததும் கண்டறியப்பட்டது.
கைப்பற்றப்பட்ட பொருட்களோடு, உள்ளூரைச் சேர்ந்த அந்தச் சந்தேக நபரும் மேல் நடவடிக்கைகளுக்காக விவசாயத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இச்சம்பவம், 1976 தாவர தனிமைப்படுத்தல் சட்டத்தில் கீழ் விசாரிக்கப்படுகிறது.