Latestஇந்தியாஉலகம்

தாய்லாந்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது நடிகை வரலட்சுமியின் திருமணம்

தாய்லாந்து, ஜுலை 10 – கடந்த ஜுலை 3 நடிகர் சரத்குமாரின் மகள் மற்றும் நடிகையுமான 39 வயது வரலட்சுமி – நிக்கோலாய் சச்சதேவ் (Nicholai Sachdev) திருமணம் தாய்லாந்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடந்தேறியது.

அந்த திருமணத்தில் தென்னிந்தியத் திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

இவர்கள் இருவரும் பல வருடங்களாக நல்ல நண்பர்களாகப் பழகி, ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொண்டு, தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். 

இவர்களின் திருமணத்தை தொடர்ந்து, சென்னையில் திருமண விருந்துபசரிப்பும் விமரிசையாக நடந்தேறியது.

நிக்கோலாய் இதற்கு முன்பே கவிதா என்பவரை மணந்து சில கருத்துவேறுபாடு காரணங்களால் விவாகரத்தானவர், அவர்களுக்கு 14 வயதுடைய மகள் இருப்பதும், அவர் ஒரு திறமையான விளையாட்டு வீராங்கனை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!