பெய்ஜீங், டிச 6 – தனது கணவரால் தாய்லாந்தில் 34 மீட்டர் உயரத்தில் பாறையிலிருந்து கீழே தள்ளிவிட்டப்பட்டதில் உயிர் பிழைத்த சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் மணவிலக்கிற்காக 30 மில்லியன் யுவன் அல்லது 4 மில்லியன் அமெரிக்க டாலரை கோரியுள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற கொலை முயற்சியினால் உயிர் பிழைந்த அந்த இளம் பெண் தற்போது 38 வயதுடைய தனது கணவருக்கு எதிராக சட்டப் போராட்டத்தில் ஈடுடுபட்டு வருகிறார். அதே வேளையில் அவரது கணவரான 38 வயதுடைய , யு சியாடோங் ( Yu Xiadong ) தனது உணர்ச்சி மற்றும் இளமை இழப்பு என்று விவரிக்கும் இழப்பீடு கோருகிறார். எனினும் தாய்லாந்தில் அவரது சிறைவாசம் சீன நீதித்துறை செயல்முறையை சிக்கலாக்குகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த வழக்கின் மூன்றாவது விசாரணையைத் தொடர்ந்து யு சியாடோங்கிற்கு தாய்லாந்து நீதிமன்றம் 33 ஆண்டுகள் நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தது.
தனது மனைவியான 37 வயதுடைய Wang Nan என்பவரை கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் தாய்லாந்து தேசிய பூங்காவில் 34 மீட்டர் உயரம் கொண்ட பாறையிலிருந்து கீழே தள்ளிவிட்டதாக யு சியாடோங் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அப்போது வாங் கர்ப்பினியாக இருந்ததோடு 17 எலும்பு முறிவுகளுக்கு உள்ளானார். கடுமையான அறுவை சிகிச்சைக்கு உள்ளான அவருக்கு 100க்கும் மேற்பட்ட ஊசிகள் மற்றும் 200 தையல்களும் போடப்பட்டன. இதனால் அப்ணென் கர்ப்பத்திலேயே தனது குழந்தையை இழந்ததோடு மீண்டும் கருதத்தரிக்க முடியாத சூழ்நிலைக்கும் உள்ளாகியிருப்பதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டினர்.