கோலாலம்பூர், ஏப் 22 – தார்மீக ரீதியில் பி.கே.ஆர் ஏற்கனவே முடிந்துவிட்டது. இனி அதை கொண்டாடுவதற்கு எதுவும் இல்லையென அக்கட்சியின் 25ஆம் ஆண்டு நிறைவு விழா குறித்து கருத்துரைத்தபோது பி.கே.ஆர் கட்சியின்
Padang Serai முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான வழக்கறிஞர் N, சுரேந்திரன் தெரிவித்தார். டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பி.கே.ஆர் கட்சியின் சீர்திருத்தங்கள் எல்லாம் தார்மீக ரீதியில் முடிந்துவிட்டதாக அவர் கூறினார். அக்கட்சி நேற்று ஷா அலாமில் 25ஆவது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது. அந்த நிறைவு விழா மகிழ்ச்சியை அளிக்கக்கூடியதாக இல்லையென அவர் கூறினார்.
20 ஆண்டுக்கு ம் மேலாக சீர்த்திருத்தங்கள் குறித்த பி.கே.ஆர் பேசிவந்தது. வந்தது. ஆனால் அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு வந்தபின் அக்கட்சியின் நிலை மாறிவிட்டது. இப்போது சாக்குப் போக்கைத்தான் கூறுகின்றனர். எனவே மகிழ்ச்சியோடு கொண்டாடுவதற்கு என்ன இருக்கிறது என தமது
X தளத்தில் பதிவிட்ட அறிக்கையில் சுரேந்திரன் தெரிவித்திருக்கிறார். பி.கே.ஆர் கட்சியின் கடந்த வந்த பயணத்தில் பல தலைவர்கள் சீர்திருத்தத்திற்காக போரடி சிறைத் தண்டனை பெற்றனர். பி.கே.ஆர் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக அந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது இந்த போராட்டம் எல்லாம் பயணற்று போட்விட்டது என சுரேந்திரன் தெரிவித்தார்.