Latestமலேசியா

திடீரெனத் திறக்கப்பட்ட கார் கதவின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் காயம்

அம்பாங், ஆகஸ்ட்-25- கோலாலம்பூர், அம்பாங், Taman Muda பகுதியில் காரொன்றில் இருந்த பயணி திடீரெனக் காரின் கதவைத் திறந்ததால், மோட்டார் சைக்கிளோட்டி ஒருவரும் அவரின் பின்னால் அமர்ந்து சென்றவரும் காயமடைந்தனர். நேற்று பிற்பகல் 12.45 மணியளவில் அச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக அம்பாங் ஜெயா மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் Khairul Anuar Khalid தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள் Tasik Permai பகுதியிலிருந்து Taman Muda நோக்கி சென்று கொண்டிருந்த போது Jalan Bunga Mawar 3ரில் அச்சம்பவம் நிகழ்ந்தது. அப்போது காரொன்று திடீரென நின்றது. அதன் பின்புற இடது பக்க இருக்கையில் இருந்த பயணி காரின் கதவைத் திறந்த நிலையில், தவிக்க இயலாது மோட்டார் சைக்கிளோட்டி அதில் மோதியதில் அவரும் பின்னால் அமர்ந்திருந்தவரும் சாலையோரத்தில் விழுந்து காயமடைந்ததாக Khairul கூறினார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவ்விருவரும் பின்னர் விபத்து குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காரின் கதவைத் திறந்த பயணியின் கவனக்குறைவே அவ்விபத்துக்குக் காரணம் என்பது விசாரணையில் தெரிய வந்ததாக அவர் குறிப்பிட்டார். அதன் அடிப்படையில் காரை ஓட்டிச் சென்றவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!