தோக்யோ, ஆகஸ்ட்-8 – ஜப்பானை இன்று இரு வலுவான நில நடுக்கக்கங்கள் உலுக்கியிருக்கின்றன.
தென்மேற்கு தீவுகளான கியூஷு (Kyushu ) மற்றும் ஷிக்கோக்குவில் (Shikoku ) ரிக்டர் அளவைக் கருவியில் 6.9 மற்றும் 7.1-ராக சக்தி வாய்ந்த அந்நில நடுக்கங்கள் பதிவாகின.
ஒரு நிமிட இடைவெளியில் ஏற்பட்ட நில நடுக்கத்தால், அந்நாட்டின் பல பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மியாசாக்கி (Miyazaki) நகரில் மிக உயரத்திலான கடல் அலைகளைக் காண முடிந்ததாக ராய்ட்டர்ஸ் (Reuters )செய்தி நிறுவனம் கூறியது.
நிலவரங்களை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அந்நாட்டு புவியியல் ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இவ்வேளையில், அந்த நில நடுக்கத்தால் மலேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லையென, மலேசிய வானிலை ஆய்வுத் துறை கூறியது