சண்டியாகோ, ஜூலை 2 – தென் அமெரிக்காவின் சிலியில் உள்ள ஒரு குடும்பம் கால்பந்து போட்டியைப் பார்ப்பதற்காக இறுதிச் சடங்கை இடைநிறுத்தியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இறப்பின் சோகத்தை விடவா கால்பந்து விளையாட்டு முக்கியம் என் பலரை கேள்வியும் கேட்க வைத்துள்ளது.
இப்போது வைரலாகும் இந்த காணொளியில் இறந்த உறவினரின் சவப்பெட்டியின் அருகில் அமர்ந்து பெரிய திரையில் புரொஜெக்டரில் சிலி மற்றும் பெரு ஆகிய அணிகளுக்கிடையிலான Copa America கிண்ண காற்பந்து போட்டியை குடும்பத்தினர் பார்க்கின்றனர். மேலும் சவப்பெட்டியில் மலர்கள் மற்றும் கால்பந்து வீரர்களின் ஜெர்சிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதாக மொரோக்கோ உலக செய்தி தெரிவித்தது. சவப்பெட்டிக்கு அருகில் உள்ள பூஜை அறையில் ஒரு சுவரொட்டியில், “ஃபெனா மாமா, நீங்கள் எங்களுக்கு வழங்கிய அனைத்து மகிழ்ச்சியான தருணங்களுக்கும் நன்றி. உங்களையும் உங்கள் காண்டோரியன் ( Condorian ) குடும்பத்தையும் நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம் என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.
பகிரப்பட்டவுடன், இந்த இடுகை இணையத்தில் கலவையான பல்வேறு எதிர்வினைகளைக் குவித்துள்ளது. இறந்தவருடன் குடும்ப உறுப்பினர்கள் கடைசி ஆட்டத்தைப் பார்ப்பது போல் இருக்கிறது. சவப்பெட்டியில் கோப்பைகள் மற்றும் ஜெர்சிகளை நீங்கள் பார்க்கலாம்” என்று ஒரு பயனர் தெரிவித்துள்ளார். நான் இறந்தபிறகு என் குடும்பத்தினரும் காற்பந்து விளையாட்டுக்கான இதையே செய்வார்கள் என நம்புவதாக மற்றொரு பயணர் பதிவிட்டார். சகோதரர் விளையாட்டிற்காக எழுத்திருக்கவில்லை என்றால் அவர் உண்மையில் போய்விட்டார் என்பதை அறிந்துகொள்ளுங்கள் என மற்றொரு பயணர் தெரிவித்துள்ளார். அவருடன் கடைசி போட்டியைப் பார்த்து அவருக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள் என மற்றொருவர் பதிவிட்டார்.