புத்ரா ஜெயா, டிச 4 – தென் கொரியாவில் வசிக்கும் அல்லது அந்நாட்டிற்கு வருகை புரியும் மலேசியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், உள்ளூர் அதிகாரிகளால் வழங்கப்படும் வழிகாட்டுதல்களை எப்போதும் பின்பற்றும்படியும் அரசாங்கம் ஆலோசனை தெரிவித்திருக்கிறது. நாடு முழுவதும் இராணுவச் சட்டம் நீக்கப்பட்டதை அடுத்து தென் கொரியாவில் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் அறிவித்துள்ளது.
தற்போதைய தகவல் மற்றும் சரியான நேரத்தில் உதவியை உறுதி செய்ய, தென் கொரியாவில் உள்ள மலேசியர்கள் மின் தூதரகம் மூலம் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூதரக உதவி தேவைப்படுபவர்களுக்கு, சியோலில் உள்ள மலேசியத் தூதரகத்தை
எண் 129 , Dokseodang-ro Hannam-dong, Yongsan-gu, Seoul 04419, என்ற முகவரியிலோ அல்லது
+82-2-2077 8600 மற்றும் +82-2-794 5488, தொலைபேசி எண்கள் அல்லது mwseoul@kln.gov.my. மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.