இஸ்தான்புல், நவம்பர்-25, ரஷ்ய தயாரிப்பிலான பயணிகள் விமானமொன்று தென் துருக்கியில் தரையிறங்கிய போது அதன் இயந்திரத்தில் தீப்பற்றிக் கொண்டது.
அவ்விமானத்தை ஓடுபாதையிருந்து அப்புறப்படுத்தும் வரை, விமான நிலைய செயல்படுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
அனைத்து 89 பயணிகளும் 6 பணியாளர்களும் அந்த Sukhoi Superjet 100 விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
விமானத்தின் இயந்திரத்திலிருந்து தீப்பொறியும் புகையும் வெளியேறுவதும், அவற்றை அணைக்க தீயணைப்புக் குழுவினர் போராடுவதும் முன்னதாக வைரலான வீடியோவில் தெரிந்தது.
காற்றின் வேகம் காரணமாக, விமானம் சற்று நிலைத் தடுமாறியே தரையிறங்கியதாகக் கூறப்பட்ட நிலையில், ரஷ்ய வான் போக்குவரத்துத் தரப்பு அதனை விசாரித்து வருகிறது.
தீப்பற்றிய விமானம் ஏழாண்டுகள் பழைமை வாய்ந்ததாகும்.
2022-ல் யுக்ரேய்ன் மீது படையெடுத்ததால் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் விதித்த தடையால், ரஷ்யா விமானப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளது.