Latestமலேசியா

தெப்ராவில் டிரெய்லர் லோரியில் கார் மோதியது; ஓட்டுனர் மரணம்

ஜோகூர் பாரு, மே 31 – தெப்ராவிற்கு அருகே டிரெய்லர் லோரியில் கார் ஒன்று மோதியதைத் தொடர்ந்து அதன் ஓட்டுனர் உயிரிழந்தார். பாக்கார் பத்துவை நோக்கிச் செல்லும் Pandanனில் வாகன ஓட்டுனர்கள் ஓய்வு எடுக்கும் பகுதிக்கு அருகேயுள்ள EDL நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை மணி 12.31 அளவில் நிகழ்ந்த அந்த விபத்தில் அக்காரில் இருந்த பெண் பயணி காயங்களுடன் உயிர் தப்பினார்.

சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட தீயணைப்பு மீட்புப்படை வீரர்கள் நொறுங்கிய நிலையில் காணப்பட்ட காரில் சிக்கிக்கொண்ட அதன் ஓட்டுனரையும் பெண் பயணி ஒருவரையும் மீட்டனர். விபத்து நிகழ்ந்த இடத்திலே அக்கார் ஓட்டுனர் மரணம் அடைந்ததை மருத்துவ உதவியாளர்கள் உறுதிப்படுத்தினர். காயம் அடைந்த பெண் பயணி Sultan Aminah மருத்துவனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். லோரி ஓட்டுநனருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லையென தெப்ராவ் தீயணைப்பு மீட்புக் குழுவின் தலைவரான Shamsul Komari Bakar வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!