Latestமலேசியா

தெரு நாய்களுக்கு நிதி திரட்ட லங்காவியில் மாபெரும் கலை நிகழ்ச்சி

கோலாலம்பூர், ஜூலை 14 – லங்காவி தீவிலுள்ள தெரு நாய்களுக்கு நிதி திரட்டுவதற்காக Pause fof Paws 3.0 என்ற தலைப்பில் லங்காவி தீவில் நடைபெறும் மாபெரும் கலைநிகழ்ச்சியில் கோலாலம்பூரிலுள்ள 30 இசைக் குழுக்கள் பங்கேற்கின்றன.

வளர்ப்பு பிராணிகனை நேசிக்கும் இருவரின் சிந்தனையில் உதித்த இந்த கலைநிகழ்ச்சி ஜூலை 27 ஆம் தேதி Bon Ton ரிசோட்டில் நடைபெறும்.

தெரு நாய்களின் இனப் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு உதவும் பொருட்டு போதுமான நிதி திரட்டும் நோக்கத்தில் இந்த கலை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான ஜாய் விக்டர் (Joy victor) மற்றும் ஜோஆன் மெலிசா வோங் (Joanne Melisa Wong) கோலாலம்பூரில் இரண்டு இசை பள்ளிகளை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!