
வாரங்கல் (தெலுங்கானா), ஏப்ரல்-4-தென்னிந்திய மாநிலம் தெலுங்கானாவில், 26 வயது தாயும் 2 மகள்களும் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில் பெரும் திருப்பமாக, அது விபத்தல்ல, திட்டமிட்ட கொலை என விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
அவர்களைக் கொன்றவர் வேறு யாருமல்ல, அப்பெண்ணின் கணவரும், அவ்விரு பிள்ளைகளின் தந்தையே என கண்டறியப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை அருகே ஒரு நீச்சல் குளத்தை வைத்துள்ள அக்குடும்பம், பொழுதுபோக்கு, குடும்ப தினம் போன்ற நிகழ்வுகளுக்கு வெளியாருக்கு அதனை வாடகைக்கு விட்டு வருகிறது.
இந்நிலையில், புதன் கிழமை மனைவியும் முறையே 8 மற்றும் 6 வயதிலான 2 மகள்களும் நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்து, மூழ்கி மரணமடைந்ததாக Azharuddin எனும் அவ்வாடவர் போலீஸில் புகார் செய்தார்.
ஆனால், சந்தேகமடைந்த போலீஸார் துருவி துருவி விசாரத்ததில், மனைவியையும் குழந்தைகளையும் குளத்தில் தள்ளி கொன்றதே Azharuddin தான் என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
மூன்றாவதாக தனது மனைவி Farhat மீண்டும் பெண் குழந்தைக்கு கர்ப்பமாக இருப்பதை அறிந்து Azharuddin கோபமடைந்து, அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டவர், பேசாமல் இந்த கருவைக் கலைத்து விடுமாறு மனைவியை வற்புத்தி வந்துள்ளார்; அவர் இணங்காத காரணத்தாலேயே கொலைக்குத் துணிந்துள்ளார்.
சம்பவத்திற்கு முன், CCTV கேமராக்கள் அணைக்கப்பட்டிருந்ததும், Azharuddin-னின் கைப்பேசி சம்பவ இடத்திலேயே இருந்ததும், அவர் மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்துகிறது.
இதையடுத்து, அவரைக் கைதுச் செய்ய தெலுங்கானா போலீஸ் சிறப்பு குழுவை அமைத்துள்ளது.



