Latestமலேசியா

தேசிய அணிக்கான ஒலிம்பிக் உடையின் வடிவமைப்பில் கிளர்ச்சி; வைரலாகும் மலேசியர்களின் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புதிய வடிவமைப்புகள்

கோலாலம்பூர், ஜூன் 26 – அடுத்த மாதம், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், அதில் பங்கேற்கும் நாடுகள் தங்களது நாட்டை பிரதிநித்துச் செல்லவிற்கும் தேசிய அணியினரின் அதிகாரப்பூர்வ ஜெர்சியை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜூன் 23ஆம் திகதி, மலேசிய ஒலிம்பிக் கவுன்சில், ஒலிம்பிக் தின கொண்டாட்டத்தின் போது TRX Exchanges-யில் மலேசியாவின் அதிகாரப்பூர்வ ஜெர்சியையும் வெளியிட்டுள்ளது.

துரதிர்ஷ்டவசமாக, மலேசிய அணிக்கான இந்த ஒலிம்பிக் உடையின் வடிவமைப்பைக் கண்டு நெட்டிசன்கள் பல்வேறு எதிர்ப்புகளால் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

ஆடையின் வடிவமைப்பு ‘குறைந்த முயற்சியை’ வெளிப்படுத்துவதாகவும், பழைய வடிவமைப்பில் மிகவும் மோசமாக உள்ளதாகவும் பலர் சமூக வலைத்தளத்தில் குமுறி வருகின்றனர்.

இவ்வாறான சர்ச்சை தொடரும் நிலையில், இன்று நெட்டிசன்களே தங்களது சுய முயற்சியில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய நவீனமான ஒலிம்பிக் உடைகளை வடிவமைத்து வைரலாக்கி வருகின்றனர்.

இதனிடையே, மற்ற நாடுகளின் ஒலிம்பிக் உடைகளையும் பகிர்ந்து, நமது நாட்டின் உடையுடன் ஒப்பிட்டுக் கருத்துகளைப் பதிவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!