கோலாலம்பூர், ஜுன் 16 – மலேசியத் தமிழ் விடிவெள்ளிக் கற்பனையாற்றல் கழகத்தின் ஏற்பாட்டில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக சிறுகதை போட்டி நடத்தப்பட்டது.
மாணவர்களின் கற்பனையாற்றலையும் மொழியாற்றலையும் மேம்படுத்தும் நோக்கத்தோடு நடத்தப்பட்ட இச்சிறுகதை போட்டியின் பரிசளிப்பு விழா கடந்த ஜுன் 8 ஆம் திகதி சுங்கை சிப்புட்டிலுள்ள ஈவுட் தமிழ்ப்பள்ளியில் நடத்தப்பட்டது.
இப்போட்டியின் முதல் நிலை வெற்றியாளராக கெடா மாநிலத்தைச் சேர்ந்த சரஸ்வதி தமிழ்ப்பள்ளி மாணவர் செ.உதயவாணன், இரண்டாம் நிலையில் டெங்கில் தமிழ்ப்பள்ளி மாணவி யஸ்மித்தா மோகன், மூன்றாம் நிலையில் டான் ஸ்ரீ டத்தோ மாணிக்கவாசகம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவி மீசா ஜெயராமன் ஆகியோர் வெற்றிப்பெற்றனர்.
பங்கெடுத்த அனைத்து மாணவர்களுக்கும் பரிசுக் கோப்பைகளும் நற்சான்றிதழும் வழங்கப்பட்டன.
இதனிடையே அதே நிகழ்ச்சியில், எழுத்தாளர் கே. பாலமுருகன் அவர்களின் கைவண்ணத்தில் உருவான ‘உயாங் மலை’ என்கிற நாவலும் அறிமுகம் கண்டது.