
புத்ராஜெயா, செப்டம்பர் 2 – புத்ராஜெயாவில் நடைபெற்ற 2026 தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது, மக்கள் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்து முன்னேறுமாறு தூண்டியதாகக் கூறப்படும் 30 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 31ஆம் தேதி தேசிய தின அணிவகுப்புக்கான இருக்கைகளைப் பெறுவதற்காக மக்கள் முன்னோக்கி செல்லும்படி அவர் தூண்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு, சிலர் கீழே தள்ளப்பட்டதில் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து போலீஸ் புகார்கள் செய்யப்பட்டிருந்தன.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர், குற்றவியல் சட்டம், தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் மற்றும் சிறு குற்றங்கள் ஆகிய சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அவர் புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, விசாரணைக்கு உதவுவதற்காக ஒரு நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



