Latestமலேசியா

பினாங்கு ஃபெரி – சரக்குக் கப்பல் மோதி விபத்து: 6 பயணிகள் படுகாயம்

பட்டவொர்த், செப்டம்பர்-2-பினாங்கு, பட்டவொர்த் சுல்தான் அப்துல் ஹலிம் படகு முனையம் அருகே, 92 பயணிகளுடன் சென்ற பினாங்கு படகு ஒன்று, MV Mekar Jaya எனும் சரக்குக் கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

​நேற்றிரவு 11 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், படகு பலமாக அதிர்ந்ததில் அதில் ஏற்றப்பட்டிருந்த பல மோட்டார் சைக்கிள்கள் கவிழ்ந்து சேதமடைந்தன.

​இவ்விபத்தில் 21 பயணிகள் காயமடைந்த நிலையில், அவர்களில் அறுவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.

​தகவலறிந்த பட்டர்வொர்த் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து முதலுதவி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், விபத்துக்கான உண்மைத் காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!