Latestமலேசியா

நியூ யோர்க்கில் டைம்ஸ் சதுக்கத்தில் பயங்கரம்: பெண் நடத்திய கத்திக்குத்துத் , தாக்குதலில் ஒருவர் பலி, மற்றொருவர் காயம்

நியூ யோர்க், செப்டம்பர்-2-அமெரிக்கா, நியூ யோர்க்கில் உள்ள உலகப் புகழ்ப் பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த திடீர் கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்; மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

அமெரிக்க நேரப்படி​திங்கட்கிழமை மாலை நெரிசல் மிகுந்த நேரத்தில், 49 வயதான Pamela Cisneros தனது ஷாப்பிங் பையிலிருந்து இரண்டு பெரிய சமையலறை கத்திகளை எடுத்து, 20 வினாடிகளுக்குள் 68 வயது முதியவரையும், 32 வயது பெண்ணையும் சரமாரியாகக் குத்தியுள்ளார்.

​காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முதியவர் ஆபத்தான கட்டத்தைக் கடந்து சீரான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

​சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த போலீஸ் நிலையத்திற்கு வெளியே அதிகாரிகள், கத்தியால் தாக்கியப் பெண்ணைச் சூழ்ந்துகொண்டு, கத்திகளைக் கீழே போடுமாறு பல நிமிடங்கள் எச்சரித்தனர்.

ஆனால், அவர் கத்திகளுடன் போலீஸாரை நோக்கி முன்னேறியதால், அதிகாரிகள் வேறு வழியின்றி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் அப்பெண் உயிரிழந்தார்.

அவர் மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும், அவருக்கு முந்தைய குற்றப் பின்னணி எதுவும் இல்லை என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் பயங்கரவாதத் தொடர்பு எதுவுமில்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!