Latestஉலகம்

தொடங்கியது ஒலிம்பிக் திருவிழா; உலகமே வியக்கும் வண்ணம் பாரீஸ் நகரில் வரலாறு காணாத தொடக்க விழா

பாரீஸ், ஜூலை 27 – உலகமே ஆவலுடன் காத்திருந்த 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகரில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.

வழக்கத்திற்கு மாறாக விளையாட்டரங்கில் இல்லாமல், பாரீஸ் நகரின் புகழ்பெற்ற செய்ன் (Seine) நதிக்கரையில் வண்ணமயமாக தொடக்க விழா நடந்தேறியது.

ஒலிம்பிக் தொடக்கவிழா திறந்தவெளியில் நடத்தப்படுவது வரலாற்றில் இதுவே முதன் முறையாகும்.

உலக அதிசயங்களில் ஒன்றான ஈஃபிள் (Eiffel) கோபுரத்தின் எதிரில் உள்ள டிரோகேட்ரோ பகுதியில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.

தீப ஓட்டத்தில் பங்கேற்ற உலக விளையாட்டுப் பிரபலங்களில் Zinedine Zidane, Rafael Nadal, Serena Williams உள்ளிட்டோரும் அடங்குவர்.

3 மணி நேர கண்கவர் தொடக்க விழாவில் பிரான்ஸ் விமானப் படையின் வான் சாகசங்கள், லேடி காகா (Lady Gaga), செலின் டியோன் (Celine Dion) உள்ளிட்டோரின் இசைக் கச்சேரி, நடனம், லேசர் மற்றும் டிரோன் ஜாலங்கள், வாணவேடிக்கைகள் களைக்கட்டின.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஒலிம்பிக் போட்டியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

செய்ன் நதிக்கரையில் 3 லட்சம் பார்வையாளர்கள் முன்னிலையில் 85 படகுகளின் மூலம் அணிவகுப்பில் பங்கேற்ற 7,500 விளையாட்டாளர்களில் 6 மலேசியர்களும் அடங்குவர்.

‘The Malaya’ என்ற பெயரில் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட மலாய் பாரம்பரிய உடையில் அவர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர்.

தேசிய முக்குளிப்பு வீரர் Bertrand Rhodict Lises பாய்மர படகுப் போட்டியாளர் Nur Shazrin Mohammad Latif இருவரும் தேசியக் கொடியை ஏந்திச் சென்றனர்.

ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை வெல்லும் வேட்கையோடு மலேசியா இம்முறை மொத்தமாக 26 பேரை பாரீசுக்கு அனுப்பியுள்ளது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இந்த ஒலிம்பிக்கில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!