Latestமலேசியா

தொழிற்நுட்ப காரணங்களால் 200 ரிங்கிட் நிராகரிக்கப்பட்டதால் மருத்துவர் விரக்தி

கோலாலம்பூர், ஜூலை 28 – உள்ளூர் மருத்துவமனையில் பணியாற்றிவரும் மயக்க மருந்து நிபுணர் ஒருவர், ஏப்ரல் மாதத்தில் 24 மணி நேர ஷிப்டுக்குப் பிறகு சாதாரண 200 ரிங்கிட் கோரிக்கையை நிராகரித்ததன் விளைவாக தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.

மருத்துவமனையின் முகவருகை அங்கீகார வருகை பதிவில் ஏற்பட்ட தொழிற்நுட்ப கோளாறினால் தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது குறித்து அந்த மருத்துவர் தனது விரத்தியை முகநூலில் இடுகையிடப்பட்டதை தொடர்ந்து அந்த விவகாரம் வைரலாகியுள்ளது. நான் அரசாங்க மருத்துவமனையில் மயக்க மருந்து பிரிவில் அர்ப்பணிப்புள்ள மருத்துவராக இருக்கிறேன். ஏப்ரல் மாதம், பணிக்காக அழைக்கப்பட்ட 24 மணிநேர கடுமையான வேலையை முடிதேன். பலரது உயிர்களை காப்பாற்றுவதற்காக அர்ப்பணிப்போடு எனது வேலையை செய்தேன்.

ஆனால் துரதிஸ்டவசமாக Face Scan முறையில் ஏற்பட்ட தொழிற்நுட்பக் கோளாறு காரணமாக அன்று காலையில் வேலைக்கான தனது வருகை பதிவு செய்யப்படவில்லை. இதன் விளைவாக எனக்கு கிடைக்கவேண்டிய 200 ரிங்கிட் நிராகரிக்கப்பட்டதாக அந்த மருத்துவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அந்த மருத்துவமனையின் கணக்காய்வாளர் மற்றும் நிர்வாக அதிகாரிகளிடம் பலமுறை முறையீடு செய்தும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது குறித்தும் அவர் ஏமாற்றம் தெரிவித்தார். இதனால் எனக்கு அநீதி இழைக்கப்பட்டதால் எனது கடமையில் உற்சாகம் இழந்துள்ளேன். இந்த விவகாரத்திற்கு சுகாதார அமைச்சும் சம்பந்தப்பட்ட மருத்துவமனையும் விரைந்து தீர்க்க வேண்டுமென அந்த மருத்துவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!