கோலாலம்பூர், ஆகஸ்ட் 9 – நேற்று நடைபெற்ற MINDA எனும் மலேசியத் தொழில்துறை விருது நிகழ்ச்சியில் தொழில்முனைவர் மற்றும் கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஸ்ணனுக்கு, ‘மடானி சமூக’ சாதனையாளர் விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது.
துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபாடில்லா யூசோப்பும் (Datuk Seri Fadillah Yusof), மலேசிய வணிக சங்கங்களின் கூட்டமைப்பும் இவ்விருதை வழங்கினார்.
இந்த கெளரவத்தை வழங்கிய டத்தோ ஸ்ரீ அப்துல் மாலிக் அப்துல்லாவின் (Datuk Seri Abdul Malik Abdullah) தலைமையின் கீழ் இயங்கும் மலேசிய வணிக சங்கங்களின் கூட்டமைப்புக்கு ரமணன் நன்றி தெரிவித்தார்.
‘இது எனக்கும், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்திற்கும் கிடைத்த கெளரவமாகும்.’
மக்களின் நம்பிக்கையை நிறைவேற்ற என்னால் முடித்த அனைத்தையும் செய்வேன். இது எனது வாக்குறுதியும் நிலையான கடப்பாடாகும். மலேசிய மடானி லட்சியத்தை அடைய ஒற்றுமையாகச் செயல்பட உறுதி செய்வோம்’ என்றும் ரமணன் கூறினார்.
மலேசிய வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட இந்த விருது விழா, 36 சிறந்த தொழில்முனைவர் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களித்த நிறுவனங்களின் சாதனைகளை அங்கீகரிக்கிறது.