ஈப்போ, ஏப் 7 – நகை வாங்குவோர்களுக்கு வரி வசூலிக்கும் திட்ட அமலாக்கத்தை ரத்து செய்யவேண்டும் என்று பேரா மாநில நகை வியாபாரிகள் சங்கம் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது. இன்று நகை விலை அதிகரித்து வருவதால் , கடைகளில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து சரிவுக் கண்டு வருகிறது.
இதனால் வியாபாரமும் பாதிப்பை எதிர்நோக்கி வருகிறது . இந்த நிலையில் நகை வாங்குவோரிடம் வரி வசூலித்தால் , வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள் என பேரா மாநில நகை வியாரிகள் சங்கத் தலைவர் டத்தோ அமலுதீன் இஸ்மாயில் தெரிவித்தார்
நகை வாங்குபவர்களில் பெருபாலோர் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
அதனை வாங்க சிறுக சிறுக பணத்தை சேகரித்து வைத்து . பிள்ளைகளின் கல்விக்கும் , வீடுகள் வாங்குவதற்கும் மற்றும் குடும்ப தேவைக்கும் அந்த நகைகள் உதவியாக உள்ளது.
எனவே நாட்டின் பிரதமரும் , நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்பராஹிம் இந்த வரி வசூலிப்பு அமலாக்கத்தை கொண்டு வரக் கூடாது என்று ஈப்போ, ஜாலான் எஸ். பியில் உள்ள Surau மையத்தில் வசதி குறைந்த குடும்ப குடும்பங்களுக்கும் , ஆதரவற்றவளுக்கும் நோன்பு பெருநாள் அன்பளிப்பும் உதவிப் பொருட்களும் வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அமாலுடின் லியுறுத்தினார்.
நகை வாங்குவோரிடம்10 விழுக்காடு வரி வசூலிப்பு நடவடிக்கை அடுத்த மாதம் முதல் அமலாக்கத்திற்கு வர உள்ளது. நகை வாங்குவோர்களின் எல்லாம் நடுத்தர குடும்பத்தினர்கள் . அவர்கள் முதலீடு திட்டத்தில் பங்குகொள்ள வில்லை.
மாறாக எதிர்கால தேவைக்கு நகைகளை வாங்குகிறார்கள் . இந்த நிலையில் வாங்கப்படும் நகைகளுக்கு வரி வசூல் அமல்படுத்தப்பட்டால் நகை வியாபாரிகளும் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவார்கள் என அவர் கூறினார்.