
புத்ரா ஜெயா, ஜன 7 – ஆகஸ்ட் மாதத்திற்குள் தீபகற்ப மலேசியாவில் நடமாடும் தொழிலாளர் நீதிமன்றத்தை மனிதவள அமைச்சு தொடங்கவிருக்கிறது. மூன்று வாகனங்களுடன் செயல்படும் நடமாடும் நீதிமன்ற சேவையின் மூலம் , கிராமப்புறங்கள் மற்றும் உட்புறப் பகுதிகளில் உள்ள தொழிலாளர்களும் முதலாளிகளும் தொழிலாளர் நீதிமன்றத்தில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பை எளிதாக்குவதே இந்த முற்போக்கான நடவடிக்கை என்று மனிதவள அமைச்சர் ஆர். ரமணன் கூறினார்.
இது அனைவருக்கும் செயல்முறையை எளிதாக்கும் ஒரு முயற்சியாக இருப்பதால் தொழிலாளர்கள் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டியதில்லை, மாறாக நீதிமன்றம் அவர்களை நாடிவரும். தொடக்கக் கட்டமாக இந்த திட்டத்திற்காக 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக மனித வள அமைச்சில் தீபகற்ப மலேசிய தொழிலாளர் ஆற்றல் துறைக்கு பணி நிமித்த வருகை புரிந்த பின்னர் ரமணன் இத்தகவலை வெளியிட்டார்.



