Latestமலேசியா

நடிகரும் பிரபல இயக்குனருமான 78 வயது கே.விஜயசிங்கம் காலமானார்

கோலாலம்பூர், ஜூன் 12 – நாட்டில் சுமார் 50 ஆண்டு காலமாக கலைத்துறையில் தீவிர ஈடுபாடு கொண்டு பல கலைஞர்களை உருவாக்கிய மூத்த இயக்குநரும் கலைஞருமான விஜயசிங்கம் கந்தசாமி காலமானார். 79 வயதாகும் அவர் இன்று அதிகாலை மணி 4.45 அளவில் செலயாங் மருத்துவமனையில் இறந்தார் என அவரத மூத்த புதல்வரான ராஜேந்திர பிரசாட் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார். மலேசியாவில் சுமார் 50 ஆண்டு காலமாக கலைத்துறையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு தொலைக்காட்சிக்கான பல நாடகங்கள், குறும் படங்கள், சாணக்கிய சபதம் உட்பட பல மேடை நாடகங்கள் ஆகியவற்றை தயாரித்து பல உள்ளூர் கலைஞர்களை அறிமுகப்டுத்திய இயக்குநராகவும் விஜயசிங்கம் திகழ்ந்துள்ளார்.

ஆடப் பிறந்தவன், மனசு மயங்கும், நாளை வரும், கரை ஓர அலைகள், உட்பட 56 டெலி மூவிகளை இயக்கியிருக்கும் இவர் கலைத்துறைக்காக 13 விருதுகளையும் பெற்றுள்ளார். 1963 ஆம் ஆண்டு தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய விஜயசிங்கம், இன்ஸ்பெக்டர் சேகர் நாடகத்தில் தமது சிறந்த நடிப்பை வழங்கி ரசிகர்களின் பாரட்டைப் பெற்றார். தொடர்ந்து பல நாடகங்களில் நடித்திருந்த அவர் தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் மலேசிய தொலைக்காட்சிக்காக பல நாடகங்கள் மற்றும் டெலி மூவிகளையும் தயாரித்துள்ளார். ஆகக்கடைசியாக அவரது தயாரிப்பில் உருவான “காதல் அது ரகசியமானது திரைப்படம்” கடந்த செப்டம்பர் மாதம் திரைக்கு வந்தது. மலேசிய சிவாஜி கணேசன் கலைமன்றத்தின் தலைவராக இருந்துவரும் விஜய சிங்கத்திற்கு மனைவி சாந்தலெட்சுமி இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். அவரது இறுதிச் சடங்கு எண் 29, Jalan Perdana 2/18, Taman Pandan Perdana , கோலாலம்பூர் என்ற முகவரியில் நாளை நடைபெற்ற பின்னர், பிற்பகல் 2 மணியளவில் செராஸ் , Jalan Kuari மின் சுடலையில் தகனம் செய்யப்படும். மேல் விவரங்களுக்கு 012-2496408

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!