பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 20 – மெல்போர்னிலிருந்து (Melbourne) கோலாலம்பூருக்கு வந்துக் கொண்டிருந்த
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில், நடுவானில் இயந்திரக் கோளாறு ஏற்பட்ட காரணமாக அது ஆலிஸ் ஸ்பிரிங்ஸுக்கு (Alice Springs) அவசரமாகத் திருப்பி விட வேண்டிய சூழல் ஏற்பட்டது.
நேற்றிரவு 11:20 மணியளவில் மெல்போர்னிலிருந்து புறப்பட்ட MH128 விமானம், இன்று அதிகாலை ஆலிஸ் ஸ்பிரிங் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதாக ஆஸ்திரேலியாவின் SBS செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, ஏர்பஸ் A330-323 விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை மலேசியன் ஏர்லைன்ஸ் அதன், அறிக்கையில் உறுதிபடுத்தியிருக்கிறது.
மலேசிய நேரப்படி அந்த விமானம், அதிகாலை 4.35 மணிக்குப் பத்திரமாகத் தரையிறங்கியது என்று மலேசியன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் மூன்று மலேசியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.