Latestமலேசியா

நண்பர்களின் வாரக் கடைசி விடுமுறை சோகத்தில் முடிந்தது; இருவர் கடலில் மூழ்கி மரணம்

கெப்பாலா பத்தாஸ், ஜூன்-17 – பினாங்கு கெப்பாலா பத்தாசில் வாரக் கடைசி விடுமுறையைக் கழிக்கச் சென்ற நண்பர்களின் மகிழ்ச்சி துயரத்தில் முடிந்திருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் Pantai Kuala Muda கடலில் குளிக்கச் சென்ற 13 பேரில் இருவர் நீரில் மூழ்கி மாண்டனர்.

இறந்தவர்கள் 26 வயது Ho Wei Keat மற்றும் 14 வயது Lim You Yi என போலீஸ் அடையாளம் கூறியது.

நண்பர்களுடன் ஒன்றாக குளித்துக் கொண்டிருந்த போது திடீரென அவ்விரு ஆடவர்களும் காணாமல் போனதை அடுத்து போலீசுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

கடலில் இறங்கியத் தேடுதல் மற்றும் மீட்புக் குழு இரவு 7.30 மணி வாக்கில் இருவரின் சடலத்தையும் கண்டெடுத்தது.

சவப்பரிசோதனைக்காக சடலங்கள் கெப்பாலா பத்தாஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!