
புத்ராஜெயா, அக்டோபர் 13 –
வரியை உயர்த்தாமல், நல்லாட்சி மற்றும் வீண்செலவு தடுப்பு முயற்சிகளின் மூலம் மக்களுக்கு அதிக நன்மையை வழங்க முடியும் என்று பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
வரி உயர்த்துவது மக்களுக்கு சுமையாக அமையுமென்றும் அதற்கு பதிலாக, அரசாங்கத்தில் உள்ள கசிவு, ஊழல் மற்றும் திறமையின்மையைச் சீர்செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசு ஆண்டுதோறும் குறைந்தது 10 பில்லியன் ரிங்கிட் செலவைக் குறைத்தால், 10 ஆண்டுகளில் 100 பில்லியன் ரிங்கிட் வரை சேமிக்க இயலும்.
இரண்டு ஆண்டுகளில் தற்போதைய அரசு 15.5 பில்லியன் ரிங்கிட்டைச் சேமித்து வைத்துள்ளது என்றும் அந்த நிதி பல்கலைக்கழகங்கள், கல்வி மற்றும் சுகாதார துறைகளுக்கு பயன்படுத்தப்படலாம் என்றும் அறியப்படுகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை, அன்வார் 470 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டுடன் 2026 ஆம் ஆண்டு பட்ஜெட்டை அறிவித்தார். இந்தப் பட்ஜெட், உலகளாவிய பொருளாதார சவால்கள் மத்தியில் சிறு தொழில்கள் மற்றும் மக்களின் நலனை முன்னிறுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.