Latestமலேசியா

நவதிஹி உத்சவம்; மலேசியாவில் 90 வருடத் தெலுங்கு திரையுலகக் கொண்டாட்டம்

கோலாலம்பூர், மே 8 – தெலுங்கு திரைத்துறையின் 90 ஆண்டுக்கால வரலாற்றை கெளரவிக்கும் ஒரு மாபெரும் நிகழ்ச்சியான நவதிஹி உத்சவத்தை ஏற்று நடத்த மலேசியா தயாராகி வருகிறது.

இந்திய திரைத்துறையிலிருந்து 143க்கு மேற்பட்ட திரையுலக நட்சத்திரங்களும் 50க்கும் மேற்பட்ட A-list பிரபலங்களும் கலந்து கொள்ளவுள்ள இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் அறிமுக விழா அண்மையில் sunway pyramid-டில் மிக விமரிசையாக நடந்தேறியது.

இந்நிகழ்ச்சி ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் திரைப்படக் கலைஞர்கள் சங்கம் தலைமையில் MC Entertaiment ஏற்பாட்டில் மலேசியா சுற்றுலாத் துறையுடன் இணைந்து நடைபெறவுள்ளது.

ஹைதராபாத்தில் முதல் முறையாக நடந்த அதன் அறிமுக நிகழ்ச்சியைத் தொடர்ந்து, திரைப்பட கலைஞர்களின் சங்கத் தலைவர் விஷ்ணு மஞ்சு, துணைத் தலைவர் Madala Ravi, மலேசியச் சுற்றுலாத் துறையின் தலைமை இயக்குநர் மனோகரன் பெரியசாமி, Sunway Resort தங்கும் விடுதியின் மேலாளர் Sidi M.Fikri ஆகியோர் முன்னிலையில் மலேசியாவில் இரண்டாம் முறையாகத் தெலுங்கு திரையுலகின் சிறப்பை வெளிக்கொணரும் வகையில் ஏற்பாடுச் செய்யப்பட்டதாக MC Entertaiment தலைவர் Edwin Anand Raj தெரிவித்தார்.

சர்வதேச நிலையில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில், துபாய், கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகளும் கலந்து கொள்ளும் நிலையில், மலேசியா சுற்றுலாத் துறையின் இயக்குநர் மனோகரன் பல சிறப்பு விமான சலுகைகளை அந்த அறிமுக நிகழ்ச்சியில் அறிவித்தார்.

இதனிடையே, தெலுங்கு சினிமாவின் நீண்ட வரலாற்றை நினைவுகூரும் வகையில் நடைபெறவுள்ள அந்த நிகழ்ச்சியில், இளைஞர்களுக்கான கருத்து பரிமாறும் அங்கமும், தெலுங்கு படைப்புப் பட்டறையையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக MC entertainment ஆலோசகர் டத்தோ பி. கமலநாதன் விவரித்தார்.வருகின்ற 20 ஜூலை அன்று புக்கிட் ஜாலில் தேசிய அரங்கத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் 70 ஆயிரம் பேர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவதிஹி உத்சம் எனும் இந்நிகழ்ச்சி நாடுகளுக்கிடையேயான நல்லுறவை வலுப்படுத்தும் அங்கமாக அமையும் என அந்நிகழ்ச்சியின் இணை இயக்குநரான Octopus studio இயக்குநரும் தலைவருமான Rahul Reddy கூறினார்.

விரைவில் பிரமாண்டமாக நடைபெறவுள்ள நவதிஹி உத்சம் நிகழ்ச்சிக்கான நுழைவு டிக்கெட்டுகளை வாங்கி, அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டு குழுவினர் கேட்டுக் கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!