வாஷிங்டன் ,ஏப் 25 – Tik Tok கை தடை செய்வதற்கான மசோதாவில் அமெரிக்க அதிபர் Joe Biden கையெழுத்திட்ட போதிலும் அந்த சமூக வலைத்தளம் தொடர்ந்து செயல்படுவதற்கான தமது கடப்பாட்டையும் ஆதரவையும் Tik Tok தலைமை செயல் அதிகாரி Shou Zi Chew மறுஉறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்க அதிபரின் அந்த நடவடிக்கையினால் சீன நிறுவனத்திற்கு சொந்தமான ByteDanceசின் Tik Tok செயலி ஒரு வருடத்திற்குள் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க வேண்டும் அல்லது தடை உத்தரவுக்கான கட்டாயத்தை எதிர்நோக்கியிருப்பதாக அந்த மசோதாவில் கையெழுத்திட்ட பின் Joe Biden கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து உறுதியாக இருங்கள் , நாங்கள் எங்கும் செல்ல மாட்டோம் என்று Shou Zi Chew பதில் அளித்துள்ளார். எந்த தவறும் செய்யாதீர்கள், இது ஒரு தடை, TikTok மீதான தடை மற்றும் உங்கள் குரலுக்கு தடை என Chew வெளியிட்ட காணொளியில் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் வேறுவிதமாக கூறலாம். இதனால் நீங்கள் குழப்பமடைய வேண்டாம் அவர் வலியுறுத்தினார். டிக் டோக்கை ஒன்பது மாதங்களுக்குள் விற்பனை செய்ய வேண்டும். சாத்தியமானால் மூன்று மாதங்களுக்கு இந்த நடவடிக்கை நீட்டிக்கப்படலாம். ByteDanceசின் Tik Tok algorithmமை Joe Biden கையெழுத்திட்ட சட்டம் கட்டுப்படுத்தவதாகவும் இருக்கிறது.