Latestமலேசியா

நாட்டின் 17 ஆவது பேரரசராக சுல்தான் இப்ராஹிம் இன்று அரியணை அமர்வதை காண்பதற்கு மலேசியர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்

கோலாலம்பூர், ஜூலை 20 – நாட்டின் 17 ஆவது பேரரசராக சுல்தான் இப்ராஹிம்
(Sultan Ibrahim) இன்று இஸ்தானா நெகாராவில் அரியணை அமர்வதை காண்பதற்கு மலேசியர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மலாய் அரச சடங்குகளுடன் பாரம்பரிய முறைப்படி இந்த வரலாற்றுப்பூர்வமான சடங்கு இஸ்தானா நெகாராவில் நடைபெறவிருக்கிறது.

1957 ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்தது முதல் மலேசியாவில் அரசியலமைப்பு முடியாட்சி தொடர்ந்து நிலைநாட்டி வரப்படும் 5ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பேரரசரின் அரியணை அமர்வு விழா மலேசிய தொலைக்காட்சியான ஆர்.டி.எம்மில் நேரடி ஒளிபரப்பாகுவதால் இந்த அபூர்வ நிகழ்ச்சியை பார்க்கும் வாய்ப்பு 34 மில்லியன் மலேசியர்களுக்குக் கிடைத்துள்ளது.

9 மலாய் ஆட்சியாளர்களில் ஒருவர் ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை சுழல் முறையில் பேரரசராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் 32 ஆவது பிரிவு உட்பிரிவு (1)இன் கீழ் பேரரசர் சுல்தான் இப்ராஹிமின் அரியணை அமர்வு சடங்கு நடைபெறுகிறது.

ஏற்கனவே ஜோகூர் சுல்தான் , சுல்தான் இஸ்கந்தர் இஸ்மாயில் சுல்தான் இஸ்மாயில் (Sultan Iskandar Ismail Sultan Ismail)1984 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டுவரை நாட்டின் 8ஆவது பேரரசராக பதிவியேற்ற பிறகு தற்போது ஜோகூர் ஆட்சியாளர்களின் இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்த சுல்தான் இப்ராஹிம் (Sultan Ibrahim) பேரரசராக அரியணையில் அமர்கிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!