Latestமலேசியா

நாட்டில் தற்கொலை செய்துக் கொள்பவர்களில் சீனர்கள் முதலிடம், இந்தியர்கள் மூன்றாவது இடம்

கோலாலம்பூர், ஜூன் 9 – நாட்டில் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதோடு 2021 ஆம் ஆண்டு மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேலாக உயர்ந்துள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்திருக்கிறார்.

2019 ஆம் ஆண்டு 609 பேரும், 2020 ஆம் ஆண்டு 621 பேரும் 2022 ஆம் ஆண்டு 981பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2021 ஆம்ஆண்டு 1,142 பேராக உயர்ந்து , கடந்த 2023ஆம் ஆண்டில் 1,087 பேர் தற்கொலை செய்து கொண்டதாக அகமட் ஸாஹிட் தெரிவித்தார்.

தற்கொலை செய்து கொண்டவர்களில் ஆண்களின் எண்ணிக்கை 3,600 ஆக அதிகரித்துள்ளது. அதே வேளையில் ஆண்களை ஒப்பிடும்போது கடந்த 5 ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட பெண்களின் எண்ணிக்கை 780 பேராக உள்ளது.

2019 ஆம் ஆண்டிலிருந்து மலாய்க்காரர் அல்லாத பிரஜைகளில் சீன சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு அடுத்த எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் மலேசியர் அல்லாத பிரஜைகள் அதிக அளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலை செய்து கொண்டவர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இந்திய சமூகத்தை சேர்ந்தவர்களும் மலாக்காரர்கள் நான்காவது இடத்திலும் இருப்பதாக இன்று நாடாளுமன்றத்தில் தேசிய சமூக மன்ற கூட்டத்திற்கு தலைமையேற்றபின் செய்தியாளர்களிடம் பேசியபோது ஸாஹிட் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!