Latestமலேசியா

நாட்டில் பதிவுப்பெற்ற 15,809 கூட்டுறவுக் கழகங்களில் மொத்தம் 7.2 மில்லியன் பேர் சந்தாதாதார்கள் – ரமணன்

புத்ராஜெயா, மே 29 – கூட்டுறவுகளின் முன்னேற்றத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் முக்கிய பங்கினை வலியுறுத்தும் நோக்கில் மலேசிய கூட்டுறவு நிறுவனமான IKMa, அனைத்துலக கூட்டுறவு மாநாடு ஒன்றை இரண்டு நாட்களுக்கு ஏற்பாடுச் செய்துள்ளது.

அதில் கலந்து கொண்ட தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துணையமச்சர், மலேசியாவில் தற்போது 15,809 பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கங்களில் மொத்தம் 7.2 மில்லியன் பேர் சந்தாதாரர்களாக பதிவு பெற்றிருப்பதாக தெரிவித்தார்.

இந்த கூட்டுறவுகளில் ஈடுபடும் இளைஞர்களுக்கு இது நன்மையை அளிக்கிறது என டத்தோ ரமணன் விளக்கமளித்தார்.

CIM எனும் மலேசியா கூட்டுறவு நிறுவனத்தின் கீழ் உருவாக்கப்பட்ட Keushawanan Koperasi Malaysia பல்கலைக்கழகமானது, இளைஞர்களுக்கு கூட்டுறவு தொடர்பான பட்டப்படிப்பை வழங்குவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, இந்த மாநாடு அனைத்து தரப்பினருக்கும் கூட்டுறவுகளின் வளர்ச்சிக்கும் உந்துதலாக தங்களின் கருத்துக்களை முன்வைக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.

நாடுகளுக்கிடையே நெருக்கமான ஒத்துழைப்பிற்கான இடத்தையும், வேலை முறைகளின் அடிப்படையில் கூட்டுறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகளை இந்த மாநாடு ஏற்படுத்தியிருப்பதாக, அதில் பங்கேற்றவர்கள் வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்து கொண்டனர்.

தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துணையமச்சர் டத்தோ ரமணன் அவர்களால் இன்று அதிகாரப்பூர்வுமாகத் திறப்பு விழா கண்ட இந்த மாநாட்டில் Korea, Thailand, Filipina, Australia, Brunei, Indonesia, India, Jepun போன்ற நாடுகளைச் சேர்ந்த ஏறக்குறைய 200 போர் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!