
ஜோகூர் பாரு, ஜன 20 – ஜோகூர் பாரு , பெர்மாஸ் ஜெயாவில்,
ஒரு நாயை தவிர்க்க முயன்ற மின்-ஹெய்லிங் ஓட்டுநர், மூன்று கார்கள் , மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு வீட்டின் மீது மோதினார்.
நேற்று மாலை மணி 4.10க்கு நடந்த அந்த விபத்தில் Honda சிட்டி காரை ஓட்டிச் சென்றபோது 26 வயதுடைய e -ஹெய்லிங் ஓட்டுனர் இந்த நெருக்கடிக்கு உள்ளானதாக தென் ஜோகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் ரவூப் செலாமாட் (Raub Selamat ) தெரிவித்தார்.
சம்பவத்தின்போது அந்த e- ஹெய்லிங் ஓட்டுனர் பாசிர் கூடாங்கிலிருந்து குடியிருப்புப் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது திடீரென நாய் குறுக்கே வந்ததால் அதனை தவிர்க்க முயன்றபோது அவரது வாகனம் எதிர் பாதையில் நுழைந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் காயம் அடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சைக்காக சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ரவூப் கூறினார்.



