நியூசிலாந்து, செப்டம்பர் 11 – கடந்த செப்டம்பர் 7ஆம் திகதி நாடு முழுவதும் மிகவும் விமரிசையாக அனுசரிக்கப்பட்ட சதுர்த்தி விழாவில், நியூசிலாந்து ஆக்லாந்து ஆலயத்தின் ஸ்ரீ கணேசரும் சதுர்த்தி விழா கண்டார்.
1500 பக்தர்கள் ஆக்லாந்து ஆலயத்தை புடை சூழ, வேழ முகத்தோனுக்குச் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்று ஊர்வலமாகவும் விநாயகர் எழுந்தருளினார்.
இவ்வேளையில், ஆலயத்திற்கு வந்து கணேசரைத் தரிசிக்க முடியாத பக்தர்களுக்காகவும், முகநூல் வழி நேரலையின் வாயில் இக்கொண்டாட்டம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு, வெளிநாட்டைச் சேர்ந்த பக்தர்கள் என ஏறக்குறைய 25,000 பார்வையாளர்களை இவ்விழா எட்டியுள்ளது.
நியூசிலாந்தில் வாழும் இந்திய மக்களும், கலாச்சாரம் மற்றும் சமயம் குறித்து அறிய வேண்டும் என்பதற்காக இக்கோயில் அங்குக் கட்டப்பட்டது.