வாஷிங்டன், ஜூலை 6 – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நீண்ட நேரம் தூங்குவதற்கு திட்டமிட்டுள்ளதோடு இரவு 8 மணிக்கு மேல் வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என முடிவு செய்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தலில் போட்டியிடவிருக்கும் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் அக்கட்சியின் கவர்னர்களிடம் இதனை தெரிவித்திருக்கிறார்.
ஜனநாயக கட்சியின் 20 க்கும் மேற்பட்ட தலைவர்களிடம் உரையாற்றிய 81 வயதான ஜோ பைடன் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் பை அதிபர் தேர்தலில் வீழ்த்தி மேலும் நான்கு ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஆட்சியில் இருக்க முடியும் என்ற நம்பிக்கையை தெரிவித்திருக்கிறார்.
எனினும் இது குறித்து வெள்ளை மாளிகை எவ்வித கருத்துக்களையும் உடனயாக வெளியிடவில்லை. அண்மையில் பைடனுக்கும் டோனல்ட் டிரம்ப்புக்கும் நடந்த நேரடி விவாதத்தில் பைடனின் தடுமாறிய பேச்சுக்குப் போதிய ஓய்வு இல்லை என காரணம் கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.