நீலாய், ஆகஸ்ட்-24 – நெகிரி செம்பிலான், நீலாயில் நேற்று மதியம் ஓர் ஆடவரின் சடலம் நிர்வாணமாக மீட்கப்பட்டது.
பெக்கான் லாமா நீலாயில் உள்ள கடையொன்றின் பின்புற கால்வாயில் அச்சடலம் கண்டெடுக்கப்பட்டது.
வெள்ளை நிறத்தோல், 165 செண்டி மீட்டர் உயரம் கொண்ட அந்நபர், 30 வயதிலான வெளிநாட்டவராக இருக்கலாமென போலீஸ் நம்புகிறது.
அவர் இறந்து 24 மணி நேரங்கள் ஆகியிருக்கலாமென்றும் தெரிவிக்கப்பட்டது.
சவப்பரிசோதனையில், அவரின் தலையிலும் உடலின் மற்ற இடங்களிலும் கூர்மையற்ற ஆயுதத்தால் தாக்கப்பட்ட காயத் தளும்புகள் கண்டறியப்பட்டன.
இதையடுத்து, அதுவொரு கொலையென வகைப்படுத்தப்பட்டு குற்றவியல் சட்டத்தின் 302-வது பிரிவின் கீழ் விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குடும்ப உறுப்பினர்களோ அல்லது தெரிந்தவர்களோ யாராவது காணாமல் போயிருந்தால், அருகிலுள்ள போலீஸ் நிலையங்களைத் தொடர்புக் கொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.