Latestமலேசியா

நீலாயில் வெளிநாட்டுப் பெண் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார்.

நீலாய், மார்ச் -4 – நீலாயில் உள்ள ஒரு தொழிலாளர் விடுதியில், 30 வயதுடைய வெளிநாட்டுப் பெண் ஒருவர் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார்.

இரவு மணி 11.21 க்கு உள்ளூர் நபர் ஒருவர் அவரச அழைப்பின் மூலம் போலீசாருக்கு தகவல் அளித்ததாக நீலாய் போலீஸ் தலைவர் Superintendant ஜொஹாரி யஹ்யா தெரிவித்தார்.

அந்த விடுதியின் படிக்கட்டில் மயக்கமடைந்து ரத்தக் காயத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆடவர் ஒருவர் கண்டுள்ளார். அப்பெண் கூர்மையான ஆயுதத்தால் உடலின் பல இடங்களில் காயத்திற்கு உள்ளாகியிருப்பது தடயவியல் பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது.

அப்பெண் தாக்கப்பட்டதற்கான நோக்கம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடக்கக்கட்ட விசாரணை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் அப்பெண்ணுக்கு தனிப்பட்ட அல்லது நிதி தகராறு இருப்பதை போலீசார் நிராகரிக்கவில்லை.

கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஜொஹாரி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!