நீலாய், செப்டம்பர் 24 – நெகிரி செம்பிலான், நீலாய் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் வீசிய புயலில், குறைந்தது 100 வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன.
மேலும், அப்பகுதியில் குறைந்தது 20க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன.
எனினும், இந்த புயலால் யாருக்கும் காயமும் உயிரிழப்பும் ஏற்படவில்லை.
கடந்த 15 ஆண்டுகளில் புயலால் ஏற்பட்ட மிக மோசமான சேதம் இதுவாகும் என்று நீலாய் சட்டமன்ற உறுப்பினர் அருள் குமார் கூறினார்.
குறிப்பாக, தாமான் ஸ்ரீ டாமர் (Taman Sri Damar), தாமான் டேசா மந்தின் (Taman Desa Mantin), கம்போங் பாரு மந்தின் (Kampung Baru Mantin), தாமான் அண்டலாஸ் (Taman Andalas) மற்றும் பெக்கான் மந்தின் (Pekan Mantin) ஆகியவை பாதிக்கப்பட்ட பகுதிகளாகும் என்றார்.
இந்நிலையில், சேதமடைந்த வீடுகளைத் துரிதமாகப் பழுதுபார்க்க ஐந்து ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
தற்போதைய நிச்சயமற்ற வானிலை காரணமாக, உடனடியாக வீட்டின் கூரைகளை பழுதுபார்க்கும் பணியை முடிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.