
ஷா ஆலம், ஜூலை 10 – கடந்த மாதம், கபார் கெச்சில் (Sungai Kapar Kechil) ஆற்று நீர் நீல வண்ணமாக மாறியதைத் தொடர்ந்து, அதன் மாசுபாடிற்கான காரணத்தை சிலாங்கூர் நீர் மேலாண்மை ஆணையம் (LUAS) கண்டறிந்துள்ளது.
சுங்கை கபார் கெச்சிலுக்கு அருகில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பதப்படுத்தும் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவுநீர்தான் ஆற்று நீர் மாசுபாட்டிற்கு காரணமாகியுள்ளது.
இந்த கழிவு நீர் வெளியேற்றத்தை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும் கழிவு நீர் மாதிரிகளை மலேசிய வேதியியல் துறைக்கு (JKM) பரிசோதனைக்கு அனுப்ப வேண்டுமென்றும் LUAS உத்தரவிட்டுள்ளது.
நீர் வளங்களை மாசுபடுத்தும் குற்றத்திற்காக LUAS அந்த தொழிற்சாலை மீது தக்க நடவடிக்கை எடுக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.