Latestமலேசியா

நெடுஞ்சாலையில் அலட்சியம்: இருக்கையைச் சாய்த்துக்கொண்டு ஆபத்தான முறையில் பேருந்து ஓட்டிய ஓட்டுநர் 4 நாள் தடுத்து வைப்பு

கோலாலம்பூர், ஏப் 21- விரைவு பேருந்து ஸ்டீயரிங் சக்கரத்தை ஒரு கையால் மட்டுமே பிடித்துக்கொண்டு, இருக்கையில் சாய்ந்தபடி அபாயகரமாக வாகனம் ஓட்டிய 53 வயதான அதன் ஓட்டுநர் விசாரணைக்கு உதவுவதற்காக இன்று முதல் நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை வரை நீடிக்கும் இந்த உத்தரவை அலோர் காஜா மாஜிஸ்திரேட் தியோ சூ யூ (Teoh Shu Yee) பிறப்பித்தார்.

1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 2 (1) ஆவது பிரிவின் கீழ் மற்றும் 1952 ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் 15 (1) (a) பிரிவின் கீழ் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று மதியம் மணி 12.10 க்கு அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவில் சந்தேக நபர் சரணடைந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

ஈப்போவிலிருந்து ஜோகூர் பாருவுக்கு விரைவுப் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, ​​அதிகாலை மணி 3.50 அளவில் இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அலோர் காஜா போலீஸ் தலைவர் அகமட் அபு பாக்கார் (Ahmad Abu Bakar ) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!