புத்ராஜெயா, ஜூலை 22 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் ஒன்றாவது மற்றும் இரண்டாவது முனையங்களில், புதிதாக 40 ஆட்டோகேட்களை அமைக்கும் இறுதி கட்ட பணிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
அடுத்தாண்டு ஆசியான் உச்சநிலை மாநாட்டை மலேசியா ஏற்று நடத்துவதை முன்னிட்டு, அந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் (Datuk Seri Saifuddin Nasution) தெரிவித்தார்.
பினாங்கு அனைத்துலக விமான நிலையத்திலும், ஆட்டோகேட்களை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நாட்டிலுள்ள விமான நிலையங்களில் நெரிசலை குறைக்கவும், சேவை நேரத்தை துரிதப்படுத்தவும் ஆட்டோகேட் சேவைகளை மேம்படுத்துவது அவசியம் என்பதையும் சைபுடின் சுட்டிக்காட்டினார்.
தற்சமயம், கோலாலம்பூர் 1 மற்றும் 2-வது முனையங்களின், பயணிகள் வந்திறங்கும் மற்றும் புறப்படும் பகுதிகளில், தலா பத்து ஆட்டோகேட்கள் சேவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.