ஆக்ரா, மே 17 – Kurkure நொறுக்கு தீனி பொட்டலத்தை தனது கணவர் வாங்கிவர மறந்ததால் ஆத்திரமும் ஏமாற்றமும் அடைந்த Agraவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை விவாகரத்து செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இது ஒரு விசித்திரமாக இருந்தாலும் தினசரி அந்த நொறுக்கு தீனியை உட்கொள்ளும் பழக்கத்தை கொண்டிருக்கும் அப்பெண் அந்த நொறுக்கு தீனியை 5 ரூபாய் கொடுத்து ஒரு பேக்கெட் வாங்கி வரும்படி தனது கணவரை அடிக்கடி கேட்டுக் கொள்வார். இந்த அற்பத்தனமான நொறுக்கு தீனிக்காக அந்த தம்பதியரிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதும் உண்டு. இந்த தகராறு தற்போது விவாகரத்துவரை சென்றுள்ளது.
அண்மையில் தனக்கு விருப்பமான அந்த நொறுக்கு தீனியை வாங்கிவரத் தவறியதால் கணவர் மீது அந்த பெண் கடும் கோபம் அடைந்தார். கணவர் வீட்டிலிலிருந்து வெளியேறிய அந்த பெண் தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்றதோடு இந்த விவகாரத்தினால் மணவிலக்கை பெற முயன்று உள்ளூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.