Latestமலேசியா

நோன்புப் பெருநாளின் முதல் நாளன்று 1,304 சாலை விபத்துக்கள்-15 பேர் உயிரிழப்பு

கோலாலம்பூர், மார்ச் 23- நோன்பு பெருநாளின் முதல் நாளில் ஏற்பட்ட
1,304 சாலை விபத்துகளில் 15 பேர் உயிரிழந்தனர்.

வெள்ளிக்கிழமை பதிவான 1,515 விபத்துக்கள் மற்றும் 26 உயிரிழப்புகளுடன் ஒப்பிடுகையில், இது ஒரு ஒட்டுமொத்த சரிவு என புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.

பெருநாள் காலத்தில் நெடுஞ்சாலைகளில் 23 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் செல்லும் என எதிர்பார்க்கப்படுவதால், சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யவும், விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் புக்கிட் அமான் நாடு முழுவதும் 5,544 போக்குவரத்து போலீஸ்காரர்களை பணியில் அமர்த்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!