Latestமலேசியா

படிப்பில் ஏற்பட்ட மன அழுத்தமே, காஜாங்கில் பெண்ணொருவர் பொதுமக்களைத் தாக்கக் காரணமென போலீஸ் நம்புகிறது

காஜாங், ஆகஸ்ட்-14- சிலாங்கூர் காஜாங்கில் சீன நாட்டு இளம் பெண்ணொருவர் ஆபத்தான முறையில் காரோட்டி, பின்னர் பொது மக்களைக் கத்தியால் தாக்கிய சம்பவத்திற்கு, இங்கு படிக்கும் போது அவருக்கு ஏற்பட்ட மனஅழுத்தமே காரணம் என நம்பப்படுகிறது.

24 வயது அப்பெண்ணிடம் போலீஸார் நடத்திய தொடக்கக் கட்ட விசாரணையில் அது தெரிய வந்ததாக, காஜாங் போலீஸ் தலைவர் Naazron Abdul Yusof தெரிவித்தார்.

உள்நாட்டு பொது பல்கலைக் கழகத்தில் பயிலும் அம்மாணவிக்கு, படிப்பில் தாம் நடத்தப்பட்ட விதம் மற்றும் இங்குள்ள வாழ்க்கைச் சூழல் பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், எந்த மாதிரியாக அவர் இங்கு நடத்தப்பட்டார் என்பதை அப்பெண் தெரிவிக்கவில்லை;
இந்நிலையில், உண்மைக் காரணத்தைக் கண்டறிய மேற்கொண்டு விசாராணைகள் நடத்தப்படுவதாக Naazron சொன்னார்.

அதே சமயம், சந்தேக நபர் மனசோர்வுக்கு ஆளாகி மருந்து மாத்திரைகள் எதனையும் எடுத்ததாகப் பதிவுகள் எதுவும் இல்லையென்றார் அவர்.

ஆகஸ்ட் 20 வரை விசாரணைக்காக அப்பெண் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை அவர் உட்பட 11 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

அப்பெண்ணின் கத்திக் குத்துத் தாக்குதலில் காயமடைந்தவர்களில் இருவர் இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நேற்று காலை ஆபத்தான முறையில் காரோட்டி 3 மோட்டார் சைக்கிளோட்டிகளை மோதித் தள்ளிய அப்பெண், பிறகு கத்தியால் பொது மக்கள் மீது ஆவேசத் தாக்குதல் நடத்தினார்.

அதில் மொத்தமாக அறுவர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!