சுங்கை லோங் டோல் சாவடியில் மோதல் சம்பவம்; ஒருவர் கைது

கோலாலம்பூர், ஜனவரி 5 – கிழக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவு நெடுஞ்சாலையான EKVE வழியாக, பாலக்கோங் நோக்கிச் செல்லும் சுங்கை லோங் டோல் சாவடியில் நடந்த மோதல் சம்பவத்தில், 30 வயதுடைய ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்த காணொளி சமூக வலைதளங்களில் பரவி, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்நபருக்கு முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது என்று காஜாங் மாவட்ட காவல் துறை தலைவர், Asisten Komisioner Naazron Abdul Yusof தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையை தொடர்வதற்காக, சந்தேகநபர் மூன்று நாட்கள் காவலில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தடுப்பு காவல் காலம் நாளையுடன் முடிவடையும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
குற்றவியல் சட்டம் மற்றும் சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த சம்பவம் குறித்து கூடுதல் தகவல் தெரிந்தவர்கள், காவல் துறையை உடனடியாக அணுக வேண்டுமென்று போலீசார் கேட்டுக்கொண்டனர்.
முன்னதாக, டோல் சாவடியில் இரண்டு நபர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் குச்சி போன்ற பொருளை பிடித்திருந்தார். அதன் அடிப்படையில் காவல் துறை விசாரணை தொடங்கியது என ஊடகங்கள் தெரிவித்திருந்தன.



