ஈப்போ, ஆக 9 – தாம் கேட்கும் பணத்தை தராவிட்டால் நிர்வாணப் படத்தை விநியோகிக்கக்கப்போவதாக முன்னாள் காதலன் மிரட்டி வருவதால் 20 வயதுடைய பெண் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார். பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிடமிருந்து புகார் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து அந்த சந்தேகப் பேர்வழியை தீவிரமாக தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பேராக் போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸி மாட் அரிஸ்
( Azizi Mat Aris ) தெரிவித்தார். இதுவரை அந்த ஆடவரின் தொடர்ச்சியான மிரட்டலால் அப்பெண் 2,000 ரிங்கிட்வரை கட்டம் கட்டமாக வழங்கியுள்ளார்.
அந்த சந்தேகப் பேர்வழி தற்போது ஈப்போவுக்கு வெளியே இருப்பதால் எந்தவொரு நடவடிக்கை எடுப்பதற்கு முன் இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அஸிஸி கூறினார். அந்த ஆடவன் சம்பந்தப்பட்ட பெண்ணை தொடர்ச்சியாக மிரட்டி வருவதாகவும் உதாரணத்திற்கு இன்று 50 ரிங்கிட் வாங்கிச் சென்றால் மறுநாள் மேலும் கூடுதலான தொகையை கேட்டு மிரட்டிவருவதாகவும் இதனால் அந்த பெண் கடும் நெருக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக இன்று பேரா போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அஸிஸி தெரிவித்தார்.